சங்கனாங்குலத்தில் ஒன்பதாவது விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கணபதி ஹோமம்த்துடன்(16-09-2012 அன்று ) ஆரம்பம் ஆனது .19-09-2012 அன்று விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டன . இனி வரும் காலங்களில் இது போல் நடக்கா வண்ணம் கவணித்து கொள்ளவேண்டும்
Friday, 21 September 2012
Tuesday, 19 June 2012
சங்கனாங்குளம் பெயர்க்காரணம்...
அருள்தரும் முப்பந்தல் இசக்கியம்மன் துணை.
நிகழ்வுக்காலம்.
இது துவாபர யுகம். இவ்வுகத்துக்கு முந்தையதான அந்த மூன்றாவது யுகத்தின் முடிவும், இன்றைய கலியுகத்தின் தொடக்கமும் கனியும் காலகட்டம். பாண்டவர்கள் பன்னிரு ஆண்டுகள், அபாயங்கள் நிறைந்த அடவிக்குள்ளும், பின் ஓராண்டு உத்தரகுமாரனின் விராட நாட்டிலும் வாழ்க்கையை முடித்திருந்தார்கள். அதர்மத்தின் மொத்த வடிவமாக அந்த யுகத்தில் பிறந்திருந்த துரியோதனன், பாண்டவர்களுக்கு ஒரு அடி நிலம் கூட கொடுக்க முடியாது என்று தூது வந்த கண்ணபெருமானை துரத்தி, இரண்டு புறமும் படைதிரட்டிக்கொண்டு, மாபாரத பெரும்போர், நிகழ இருக்கும் நேரம். அர்ச்சுனனும் அவனுக்கு சாரதியாக இருக்க இசைந்திருக்கும் கன்னபெருமானும் அடிக்கடி, போர்ச்சூழல்கள் குறித்தும், போரில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் குறித்தும் விவாதித்துக்கொண்டிருக்கும் வேளை.. இங்குதான் நம் சரித்திரம் தொடங்குகிறது...
கதை.
“ கண்ணா... ஒரே மன சஞ்சலமாக இருக்கிறதடா.... என் பெரியப்பா பையன் ஏன் இப்படி செய்கிறான்..சாகும் போது இந்த உலகத்தில் யார் எதை எடுத்துக்கொண்டு போகப்போகிறோம்?. ஒரு ஐந்து வீடுகள் தானே அண்ணன் கேட்டார். அதைக்கூட ஏன் தர மறுக்கிறான்?. வீணாக இந்த போரில் அவன் செத்து மடிய போகிறான் என்று எனக்கு கவலையாக இருக்குதடா..”
மூத்தவன் என்றாலும், அளவுக்கதிகமான வயது வித்தியாசம் இல்லாத காரணத்தாலும், அத்தைமகன் என்பதாலும், அடிக்கடி அத்தான் என்று அழைத்தாலும் பெரும்பாலும் நீ, நான், வாடா, போடா என்று கண்ணனிடம் அவர்கள் பேசிக்கொள்வது வழக்கமாக இருந்தது.
“ ஒனக்கு வேற வேலை இல்லடே.. எப்ப பாத்தாலும் இதே நினைப்பு...அவன் முடிஞ்சா வந்து மோதிப்பாரு ன்றான்..நீ என்னடான்னா...அவன் சாவுவான், இவன் சாவுவான் ன்னு அழுதுகிட்டு இருக்க.....உன்னிய கொல்லதுக்கு ஆள்வேணும்னே அவன் கர்ணன வளக்கான்.. வெளங்கும்.. பேசாம அவன் பக்கமே போயி சேந்துருக்கலாம்... வீரன்னு நெனச்சு உங்க கூட வந்தா..என்னையும் கோழை ஆகிட்டுத்தான் மறு சோலி பாப்பீரு போல இருக்கு....சும்மா மனச போட்டு குழப்பாத...கெட்டவன் சாவனும்கிறது உலக நீதியப்பா...இது நீ என்ன..அவன் என்ன...”
ஒவ்வொரு முறையும் இப்படி தேற்றுவதே கண்ணபெருமானுக்கு வேலையாக இருந்தது...
“ உமக்கு என்ன அத்தான்..ஒட்டு உறவு ஒன்னும் கிடையாது.. எல்லாம் வேஷம் பீரு... எவனுக்கு எப்போ ஊதலாம்னு சங்க கையில எடுத்துட்டு அலையுறதே ஒம்ம வேலை... நாங்க அப்படியா..சின்ன வயசுல ஒண்ணா விளையாண்ட ஆட்கள்.... இப்போ திடீர்ன்னு சண்டைக்கு வந்துட்டு அவன கொல்லுன்னா.. ..”
இப்படி பலவாறாக அவ்வப்போது பிதற்றிக்கொண்டிருப்பதையே தொழிலாக வைத்திருத்தான் அர்ச்சுனன். பல ஆண்டுகள் காட்டிலேயே வாழ்ந்துவிட்டதாலும், ஓராண்டு பேடியாக வாழ்ந்து காலம் தள்ளியதாலும், உறவுகள் மீதான பாசம் அர்ச்சுனனுக்கு அதிகமாகி இருந்தது. இவனை கொஞ்சம் ஊர் சுற்ற கொண்டுபோனால் திருந்துவான் என்று நினைத்தார் கண்ணபெருமான்.
“மாப்ள..எங்கூட வாடே..கொஞ்சம் ஊர சுத்திப்பாத்துட்டு வரலாம்...”
“ சரித்தான்..அண்ணன்கிட்ட சொல்லிட்டு வாறன்...”
“அப்புறம் சொல்லிக்கலாம்வே... என் கூட போயிருக்கான்னு சொன்னா அண்ணன் ஒன்னும் சொல்ல மாட்டாரு... சகாதேவன் கிட்ட சொல்லிட்டு போகலாம் வா....”
சற்று தொலைவில் போருக்கான நாள் குறிக்கும் சாத்திரங்களை படித்துக்கொண்டு இருந்த சகாதேவனிடம் சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள். கண்ணன் தன் திவ்யமான இரதத்தை எடுத்துக்கொண்டு வந்து நிறுத்தினான்... இருவரும் புறப்பட்டு தென்திசை நோக்கி வந்தார்கள்.
வருகிற வழியெங்கும் இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள்.
“ மாப்ள அங்க பாரு ஒரு கருடன் நம்ம தேருக்கு மேல பறக்குது.....”
அர்ச்சுனன் மேல் நோக்கி பார்த்தான்..அங்கே ஒரு காகம் அவர்கள் தேருக்கு அருகில் பறந்துகொண்டு இருந்தது.
“ஆமா..அத்தான் நீர்தான் கொஞ்ச நாளா அத கவனிக்கிறதே இல்லையே... அதான் கவலையில சுத்துன மாதிரி தெரியுது..”
அவனது மனம் கொஞ்சமும் தேறவில்லை என்பதும், இன்னும் கவலையிலேயே அவன் ஆழ்ந்திருக்கிறான் என்பதும் கண்ணனுக்கு புரிந்தது.
“யோவ்..அது கருடன் இல்லவே....காக்கா...”
“ஆமா காக்காதான்...”
“அப்போ..நான் கருடன் ன்னு சொன்னப்போ..என்னவோ கத சொன்னீரு...”
“ நான் காக்கா ன்னு சொல்ல..நீர் கருடன் ன்னு சொல்ல... அப்புறம் நான் பாக்கிறப்போ..அதே காக்காவ நீர் கருடனா மாத்த...ஒம்ம சக்தி நமக்கு தெரியாதா....வெளையாடாம வண்டிய ஒழுங்கா ஓட்டும்....”
கேலி செய்வதற்கு கூட வாய்ப்பில்லாமல் அர்ச்சுனன் விவாதத்தை முடித்து வைத்தான்.
சகடத்தின் சக்கரங்கள், செல்வத்தின் நிலையாமையை சொல்வது போல ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தன. கொஞ்ச நேரமாக தேர்த்தட்டில் சத்தமே இல்லை. அவனாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று கண்ணன் விட்டுவிட்டதாகவே தெரிந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை...
சில நேரத்துக்கு பின்னர்.... தேர்த்தட்டில் விசும்பும் ஒலி கேட்டது கண்ணனுக்கு... திரும்பி பார்த்தான். தேர்க்காலில் ஒன்றை பிடித்தபடி, இரதத்தின் அடிப்பாகத்தை பார்த்தபடி, அழுதுகொண்டிருந்தான் அர்ச்சுனன்.. கடிவாளக் கயிற்றை இறுக்கி இழுத்து, வண்டியை நிறுத்தினான் கண்ணன்..
“ இப்போ எதுக்குடே அழுத....”
சாரதியின் இருக்கையை விட்டு இறங்கி அர்ச்சுனனின் கைகளை பிடித்துக்கொண்டு கேட்டான் கண்ணன்..
“ எனக்கென்னவோ இந்த சண்டையில நாம செயிப்போம்னு தோணல...”
“ச்ச..ஒன்ன கூட்டிட்டு எவனாவது ஊர்சுத்த போவானா... ஒருவருஷம் தானடே..பேடி வேஷம்..இன்னுமா கலையல... “
“ இல்லத்தான்..எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் துரியோதணன் பக்கம்..நெனச்சு பார்த்தா நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு....எப்படி நாம செயிக்க போறோம்...போறாத குறைக்கு நம்ம அண்ணமார் எல்லாம் அர்ச்சுனன் இருக்கான்..அர்ச்சுனன் இருகான்னே சொல்றாங்க...ஒருவேள தோத்து போயிட்டோம்னு வையி..எல்லாரும் என்னையவே கொற சொல்வாங்க..தேவையா இந்த அவப்பழி எனக்கு.. எங்கேயாவது கெணத்துல விழுந்துசெத்துரலாமான்னு தோணுது கண்ணா...” ******
திருந்த மாட்டான் என்று நினைத்தவனாக, பதிலேதும் சொல்லாமல் அழுது முடிக்கட்டும் என்று விட்டுவிட்டு, மீண்டும் இரத்தத்தை செலுத்தினான் கண்ணன்.
ஒரு கல்தொலைவு தாண்டியிருப்பார்கள்...
“யோவ்..வண்டிய நிறுத்தும்யா... “
நிறுத்தினான் கண்ணன்..ஒரே குதியாக குதித்து தேரை விட்டு கீழிறங்கினான் பார்த்தன்.*********
“..நான் பாட்டுக்கு அழுதுகிட்டே இருக்கேன்.. நீர் பாட்டுக்கு ஒன்னும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்...என்னிய பார்த்தா கிறுக்கனா தெரியுதா ஒமக்கு..பெரிய மனுஷன் ன்னு சொல்லி கூட வந்தா, இப்படி தனியா புலம்ப விட்டுட்டு ஒம்ம பாட்டுக்கு இருக்கிற... இனிமே நான் வரலை...நீர் மட்டும் ஊருக்கு போம்...செயிச்சாலும் சரி..தோத்தாலும் சரி...அண்ணன் கேட்டா அர்ச்சுனன் செத்துட்டான்னு சொல்லும்.”
காண்டீபத்தை தரையில் ஊன்றிக்கொண்டு வெறுப்பாக சொன்னான் அர்ச்சுனன்.
கண்ணனும் இரத்தத்தை விட்டு இறங்கினான். அர்ச்சுனனை அரவணைத்துக்கொண்டு அங்கிருந்தா பாறை திடலில் அமர்ந்தார்கள் இருவரும்... போரில் மாபெரும் வெற்றியை அர்ச்சுனனுக்கு ஈட்டிக்கொடுக்க இருக்கும் காண்டீபமும், தர்மத்தின் வெற்றியை உலகமெல்லாம் முழங்க இருக்கும் பாஞ்சசன்யமும், தங்களது திறமைக்கான எந்த ஆரவாரமும் இல்லாமல் தரையில் கிடந்தன.
“மாப்ள.... சொல்றத கேளும்....”
“போதும் நிறுத்தும்..நீர் சொன்னத கேட்டுத்தான் நாங்க வெளங்காம போனோம்....திரேதா யுகத்துல இப்படித்தான் பிள்ளை கூட சேர்ந்துகிட்டு அப்பனையே கொன்ணீரு... கிருத யுகத்துல தம்பி கூட சேர்ந்துகிட்டு அண்ணனுக்கே வேட்டு வச்சீரு... இப்போ எங்க சொக்காரன் கூடயும் எங்கள சண்டைக்கு இழுத்து விட்டு வேடிக்க பாக்கலாம்னு நெனக்கீரு...ஒமக்கு இதே வேலையா போச்சு..ஏதாவது கேட்டா, பெரிய அறிவாளி மாதிரி பேச வந்துறது....”
அருமையாக வளர்த்த பாட்டனையும், அறிவு சொல்லிக்கொடுத்த ஆசானையும் எதிர்க்க திராணியில்லாத காரணத்தாலும், போரில் தோற்றுவிட்டால் எங்கே எல்லோரும் தன்னையே குறை சொல்லிவிடுவார்களோ என்னும் தேவையில்லாத கழிவிரக்கதாலும் அர்ச்சுனன் பேசுவதை கண்ணன் உணர்ந்துகொண்டான். அவனுக்கு கீதை உபதேசித்து விடலாமா என்று சிந்திந்தான். எத்தனை சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும், பழங்கதைக்கே திரும்பிவரும் அவனுடைய சுபாவத்தை ஏற்கனவே எடைபோட்டிருந்தான் கண்ணன். ஆதலால் கீதை, போருக்கு முன்னர்தான் உபதேசிக்கப்பட வேண்டும் எனவும், உபதேசம் முடிந்தவுடன் போர் தொடக்கம் தான் சரியாக இருக்கும் எனவும் கணித்து வைத்திருந்தான் கண்ணன். ஆதலால் இப்போதைக்கு கீதோபதேசம் தேவையில்லை என்று முடிவுகட்டினான்.
“ மாப்ள... நான் சொல்றத..கேளு....வீணா போட்டு மனச குழப்பாத...”
அர்ச்சுனன் தலையை நிமிர்த்தி பார்த்தான்.
“ தர்மம்தான் உலகில் எப்போதும் வெல்லும்.. அதனால இந்த போர்ல நாமதான் ஜெயிக்க போறோம்..உன்னாலதான் ஜெயிச்சோம்னு எல்லாரும் ஒன்ன கொண்டாடுவாங்க...யுகயுகாந்திரத்துக்கும் வில்லுக்கோர் விஜயன் னு எல்லாரும் ஒன்ன பத்தி பெருமையா பேசுவாங்க....”
கர்ணனின் கனத்த மார்புகளில் கணை தொடுக்க காத்திருக்கும் காண்டீபத்தையும், துரோணரை துரோகத்தால் கொல்ல துடித்துக்கொண்டிருக்கும் பாஞ்சசன்யத்தையும் பார்த்தான் அர்ச்சுனன். அந்த இடத்தில் அவனுக்குள் ஒரு தெளிவு பிறந்தது...
“எத்தான்..நீர் சொல்லுறது மட்டும் நடந்துதுன்னு வையும்...இதே இடத்துல ஒமக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோம்வே...”
“சரி..சரி..வா..ஊருக்கு கிளம்பலாம்..”
கொஞ்சம் அவன் தேறி இருப்பதாகவும், இப்போதே அவனை கிளப்புவதுதான் நல்லது என்றும் கண்ணன் நினைத்தான்.
வழி நெடுகிலும் இருவரும் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அர்ச்சுனன் தெளிவாகிவிட்டதை கண்ணன் நம்பவில்லை..அவனுக்கு கீதை உபதேசிக்கும் காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தான்.
மாபெரும் பாரத போர் மூண்டது... பதினெட்டாம் நாள் போர்முடிவில் சூது கவ்வியிருந்த தர்மத்தின் வாழ்வு தழைத்தது. அம்பு படுக்கையில் கால மாறுபாட்டுக்காக படுத்திருந்த பிதாமகன் இறைவனடியில் தன்னை இணைத்துக்கொண்டார். கண்ணன் தன் வேலை முடிந்து துவாரகை திரும்ப எண்ணினான்.
“ மாப்ள... ஊருக்கு போலாம்னு இருக்கேண்டா...”
“வம்சமே அழிஞ்சு போச்சே அத்தான்..இதான் வீரமா?..”
“அடச்சீ...நீ திருந்தவே மாட்டியா....உத்தரை வயித்துல வளரும் குழந்தை குருவம்சத்தை விருத்தி ஆக்குமப்பா...சும்மா....ஆமா...போர் முடிஞ்ச ஒனக்கு ஒரு கோயில் கட்டுவேன்னு ஒரு பாறையில வச்சு சொன்னிய.. நெனப்பு இருக்கா...”
“யோவ்..நல்ல வேளை சொன்னீரு... நான் அக்கா கிட்ட பேசுறேன்..நீர் அடுத்த வாரம் ஊருக்கு போம்...முதல்ல அந்த இடத்துக்கு போய் பாத்துட்டு வருவோம்... என்ன சொல்லுதியோ..”
“நான் சொல்லதுக்கு என்னவே இருக்கு...ஒம்ம அக்காகிட்ட பேசவேண்டியது ஒம்ம பொறுப்பு...அவா ஊருக்கு போனும்னு நிக்கா...அங்க ஊரே நம்மள எதிர்பார்த்து காத்திருக்கு...எனக்கும் அந்த இடத்துக்கு போனும்னு ஆசையாத்தான் இருக்கு...அந்த இடமே ஒரு திவ்யபூமி வே...அங்க கால் வச்சாலே கோழைக்கும் வீரம் வந்துரும்..சரி..சரி..நீ..புறப்படு...”
அந்த பூமி குறித்து தான் மனதில் நினைத்ததை கண்ணன் அப்படியே சொன்னதில் அர்ச்சுனன் அரண்டு போனான்.
இருவரும் புறப்பட்டு தென்திசை நோக்கி வந்தார்கள். கண்ணன் ஓரிடத்தில் தேரை நிறுத்தினான்..
“எடம் வந்துட்டு நினைக்கிறேன் வே...”
“இல்ல..இன்னும் போகணும்....”
இருவருக்கும் அந்த இடத்தின் அருகில் வந்துவிட்டோம் என்பது தெரிந்தது. தேரை மெல்ல செலுத்தி, அந்த பாறை எங்காவது தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தார்கள் இருவரும்.
இடத்தை கண்டுபிடிக்க முடியாத கவலையில் இருவரும் இருந்த போது, இருவர் உள்ளத்துக்குள்ளும் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி வந்தது. அன்று கண்ணனை தேற்றியபின் அர்ச்சுனன் உள்ளத்தில் தோன்றிய அதே உணர்வு... எந்த வீரவிவேகத்தை அந்த மண் தந்ததாக அவர்கள் பேசிக்கொண்டார்களோ...அதே உணர்ச்சி...இடம் வந்துவிட்டதில் இருவருக்கும் அளவிட முடியாத ஆனந்தம். என்ன செய்கிறோம் என்று தெரியாமலே...************
கண்ணன் தனது தெய்வீகமான பாஞ்சசன்யத்தை கையில் எடுக்க, அர்ச்சுனன் தந்து திவ்யமான தேவதத்தை வாயில் பொருத்த....முழக்கம்...சங்கில் நுழைந்து சத்தமிட்ட காற்று, வளியின் அதிர்வுகளை கிழித்துக்கொண்டு, மூவுலகும் அதிர முழங்கியது. உலகெங்கும் அந்த முழக்கத்தால் ஆட்டம் கண்டது. தர்மத்தை அனுசரிப்போருக்கு ஆதரவு போலவும், அதர்மவாதிகளுக்கு ஏதோ அசம்பாவிதம் போலவுமான அனுமானத்தை அது உண்டாக்கிற்று.
முடிந்த அளவுக்கு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து முழங்கினார்கள் இருவரும்.
“மாப்ள..கீழே இறங்கு...இந்த பூமியில் உன் காலடிகளை பதித்து வணங்கு...”
கண்ணன் சொல்லுக்கு மறு சொல் உண்டா?. பார்த்திபன் காண்டீபத்தை தரையில் ஊன்றி காலை அந்த மண்ணில் பதித்தான். அவன் மேனியில் ஒரு நடுக்கம் உண்டாயிற்று. வீரம்..வீரம்..வீரம்..தர்மம்..தர்மம்..தர்மம்...என்ற சொல்லுடன் அவனுடைய நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின்னூட்டம் பாய்வதை அவன் உணர்ந்தான்.
“ஹஹஹஹஹா...ஹஹஹ்ஹா....ஹாஹஹஹா.......”
நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தார்கள் இருவரும்.
“அத்தான்..என்ன சிரிப்பு.....”
அவனும் சிரித்துவிட்டு தன்னிடம் காரணம் கேட்கிறானே என்று நினைத்தான் கண்ணன்..
“இல்ல மாப்ள...அடுத்த யுகத்தில் இந்த இடத்தில் ஒரு ஊர் தோன்றும். ஒரு குளத்தின் கரையில் மக்கள் வாழ்வார்கள். தர்மத்தின் வெற்றியை உலகுக்கு அறிவிக்க நாம் சங்கநாதம் செய்த காரணத்தால் அந்த குளம் சங்கநாதன்குளம் என்று அழைக்கப்படும். நான் படைத்த நான்கு வருணத்தாரும் இணக்கத்துடன் வாழ்வார்கள். முச்சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் முக்குலத்துப்புலிகள் இந்த ஊரை அரசாட்சி செய்வார்கள். வெற்றி முழக்கத்தில் பிறந்த இந்த ஊரில் பிறப்போருக்கு தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியாக முடியும். பயம் என்றால் என்னவென்றே அறியாத வீரர்கள் இங்கே உதிப்பார்கள். நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் குழந்தைகள் இங்கே பிறப்பார்கள். முத்தமிழ்நாட்டை முடிசூட்டி ஆளப்போகும் ஆட்கள் இங்கே அவதரிப்பார்கள். இறைதூதர் ஒருவர் இந்த ஊரில் தங்கியிருந்து மறை அருளுவார். நாம் சங்கம் முழங்கிய இவ்வூரில், காலையிலும் மாலையிலும் சங்க முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கும்..” இதழோரங்களில் புன்னகையை தவழவிட்ட படி கண்ணன் இன்னொன்றும் சொன்னான். “..இப்படி நாம் இங்கே வந்துசென்றதை அக்காலத்தில் அறிவிப்பதற்கு என்றே ஒருவன் இங்கே பிறப்பான். அவனுக்கு காலம் என் பெயரையே சூட்டி மகிழும்....”. சந்நதம் வந்தது போல, மனக்கண் முன் தோன்றிய வருங்கால நிகழ்வுகளை அர்ச்சுனனுக்கு சொன்னான் பார்த்தசாரதி.
இருவரும் கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, ஒரு கல்தொலைவில் இருந்த பாறைக்கு வந்தார்கள்.
“கண்ணா.. இந்த இடத்தில் உனக்கொரு ஆலயம் அமைப்பேன். எங்களை ராஜாக்களாக்கி அழகு பார்த்த உனக்கு இராஜகோபாலசாமி என்று பெயர் மொழிவேன். ஐம்பொன்னால் உனக்கொரு சிலை அமைப்பேன். உன்னை வழிபடும் மக்கள் வாழ்வுயர மாபெரும் குளம் ஒன்று இப்பாறையின் கரையிலேயே சமைப்பேன். எனது வழி வழி வம்முசங்கள் மூவுலகுக்கும் இறைவனாக உன்னைக் கொண்டாடும். குதிரையிலும் தேரிலும் உன்னை அமர வைத்து, விழா நடத்தும். நம் இருவரின் பெயரால் இந்த ஊர் விஜயநாராயணம் என்றே அழைக்கப்படும்...”
கருடபகவான் வட்டமிட்டு, காலில் இருந்த ஓலையை இவர்களுக்கு அருகில் கழற்றி விட்டு போனான்.
“உடனே திரும்பி அத்தினாபுரம் வரவும். – அண்ணன்..”
தகவல்கள்
1.அர்ச்சுனனுக்கு போர் குறித்த அச்சம் வந்து அவன் அழுத இடம்..---விஜயஅச்சம்பாடு. எங்கள் ஊரில் இருந்து இரண்டு கல்தொலைவு.
2. வெற்றி சங்கம் முழங்கிய இடம் – சாட்சாத் எங்கள் ஊர்தான்..காலத்தால் மருவி சங்கனாங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
3.அர்ச்சுனன் கண்ணபெருமானுக்கு ஆலயம் அமைத்த இடம் ---விஜய நாராயணம். எங்கள் ஊரில் இருந்து ஒரு கல் தொலைவு. ஐம்பொன் சிலையே மூலவராக இருக்கும் அதிசய ஆலயம். பலகாலம் பாண்டவர்கள் வழிபட்ட சிலை இது. பிரம்மதேவன் அர்ச்சுனனுக்கு அளித்ததாக செவி வழி செய்திகள்.
அன்புடன்.
இரா.பார்த்தசாரதி
(தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்)
Thursday, 14 June 2012
Monday, 13 February 2012
Saturday, 4 February 2012
இலங்கையின் அழைப்பை ஏற்று, A.B.J.ABDULKALAM
இலங்கையின் அழைப்பை ஏற்று, ஜனவரி 20-24, 2012ல், அங்கு மும்மொழித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வைபவத்தில், நானும் என் குழுவினரும் கலந்து கொண்டோம். இலங்கையில் இதுவரை நடந்த, நடந்து வரும் அனைத்து சம்பவங்களையும், போர்க் கால சம்பவங்களையும் பற்றி, நான் கனத்த இதயத்தோடு அறிவேன். போருக்கு பின்னால், அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களைச் சென்று பார்த்து, கலந்துரையாடி, அங்குள்ள நிலைமை என்ன என்று அறிந்து வர வேண்டுமென, வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே, எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கைக்கு சென்று வந்தேன்.
இலங்கை தமிழர் பிரச்னையில், நான் இரண்டு விதமாக பங்கெடுக்க முடியும். ஒன்று, இந்தியாவில் இருந்து கொண்டே அறிக்கை விடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, பகைமையை வளர்க்கும் விதத்தில், அதைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது என்பது ஒரு வகை. இரண்டு, இலங்கைக்கு சென்று, அங்குள்ள சூழ்நிலைகளை நேரில் அறிந்து, அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து, உரையாடி, இப்போது இருக்கும் சூழ்நிலைகளை அறிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களையும் மற்றும் அரசியல் தலைவர்களையும், பெருமக்களையும், இலங்கை அரசாங்கத்தையும் கலந்தாலோசித்து, பேச வேண்டிய விதத்தில், பேசவேண்டிய இடத்தில் பேசி, இந்தப் பிரச்னைக்குரிய தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பது இரண்டாவது வகை. நான் தெரிந்தெடுத்த வழிமுறை, இரண்டாம் வகையிலானது. இலங்கையின் மும்மொழித் திட்டத்தின் தொடக்க விழா அழைப்பை, அதற்கு பயன்படுத்திக் கொண்டேன். இலங்கையின் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தேன். அங்கு, தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்தேன். இளைஞர்களையும், அனுபவசாலிகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் மற்றும் அரசியல் தலைவர்களையும், பெருமக்களையும், இலங்கை அரசாங்க அமைச்சர்களையும், அதிகாரிகளையும், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து உரையாடினேன். அவர்களது கருத்துக்களை அறிந்து கொண்டேன். அங்கு சிறப்பாக செயல்படும் சர்வோதயா திட்டத்தின் மூலம், எப்படி வட கிழக்கு மாநிலங்களில், பல்வேறு உதவிகள் சென்றடைகிறது என்பதையும் அறிந்தேன்.
கொழும்புவில் மட்டும், 7 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினேன். மாணவர்கள் பல கேள்விகள் கேட்டார்கள், அவர்களிடமும் நான் பல கேள்விகளை கேட்டு, பல விஷயங்களை அறிந்து கொண்டேன். இலங்கையில் நல்ல ஜனநாயகம் மலர வேண்டும், அமைதி திரும்ப வேண்டும், அங்கு வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக, சமாதானமாக, சரிசமமாக வாழவேண்டும், அங்கு வாழும் இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வரவேண்டும், அவர்களும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பது தான், எனது பயணத்தின் நோக்கமாகும். அந்த பாதையில், மும்மொழித் திட்டம் முதல் முயற்சி என்பதால், அதை நாம் வரவேற்க வேண்டும். நம்பிக்கையின்மையால், யாருக்கும் நல்ல பயன் கிடைக்கப் போவதில்லை.
மும்மொழித் திட்ட அறிமுக நிகழ்ச்சியில், ஒரு சிங்கள மாணவி, அருமையான தமிழில் பேசினாள், ஒரு தமிழ் மாணவி நன்கு சிங்களத்தில் பேசினாள், ஒரு முஸ்லிம் மாணவி, அருமையான தமிழிலும், சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் பேசினாள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது
மொழி மதங்களை ஒன்றிணைக்கிறது
மொழி நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது
எனவே, அப்படிப்பட்ட ஒரு நிலைமை தோன்ற வேண்டுமென்றால், மும்மொழியையும், அனைவரும் வேறுபாடின்றி ஓர் உன்னத நோக்கத்தோடு மனம் ஒன்றுபட்டு பயின்றால், வேறுபாடு மறையும், கலாசாரம் சிறக்கும்; மொழியின் மூலம், வரலாறு சிறக்கும்; ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள உதவும் ஆட்சிமுறை, அனைவருக்கும் சென்றடையும் என்று நம்புவோமாக. எனவே, இந்தியாவின் சார்பாக, அந்த மும்மொழித் திட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றியது ஒரு வாய்ப்பாகும்.
இலங்கையில் பல்வேறு சமுதாயங்கள் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்த ஒரு சமூக அமைப்பை, ஒரு நாட்டை வடிவமைக்கும் போது, வளர்ச்சித் திட்டங்கள் எவ்வித வேறுபாடும் இன்றி, அனைத்து சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும். ஒரு மேன்மை தாங்கிய (Noble) நாட்டை உருவாக்க வேண்டுமென்றால், வேற்றுமையில் ஒற்றுமை காணவும், வேற்றுமையை போற்றும் தன்மையைப் பெறவும், அது மட்டுமல்ல, பல்வேறு இனங்களை, மொழிகளைக் கொண்ட மக்கள், அவர்களது கருத்துக்களையும், கலாசாரத்தையும், நம்பிக்கையையும், வாழ்க்கை முறையையும், சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக்கொண்டு வாழக்கூடிய ஜனநாயக நாடாக, இலங்கை மாற்றப்பட வேண்டும். அப்போது தான் அது, வேறுபாடற்ற ஒருங்கிணைந்த, மேடு பள்ளமற்ற, ஒரு சமதர்ம சமுதாயம் அமையப் பெற்ற ஜனநாயக நாடாக மலரும் என்ற என் கருத்தை, இலங்கை குடிமக்கள் முதல் ஜனாதிபதி வரை, அதுமட்டுமல்ல, பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற அந்த மும்மொழி திட்ட துவக்க விழாவில் தீர்க்கமாக எடுத்துரைத்தேன். எனவே, இப்படிப்பட்ட ஒரு நாட்டை உருவாக்க, இலங்கை பிரச்னை ஏற்படுத்திய அதன் அடிப்படை காரண காரியங்களை அறிந்து, அவற்றை அரசியல் சட்டத்தின் வழியில் ஜனநாயக அமைப்பின் மூலம் சரிசெய்ய வேண்டியது தான், இலங்கையின் தலையாய கடமை என்பதை வலியுறுத்தினேன்.
அது மட்டுமல்ல, 40 ஆயிரம் கிராமங்களைக் கொண்ட இலங்கை கிராமப்புரத்தின் நீடித்த மேம்பட்ட வளர்ச்சிக்கு, 160 PURA Clusters அதாவது, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்தல் என்ற திட்டத்தின்படி, இந்தியாவின் உதவியுடன் செயல்படுத்த ஆலோசனை வழங்கினேன். ஜனவரி 21, 2012ம் ஆண்டு, இரவு, இலங்கை ஜனாதிபதியை சந்தித்த போது, இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி அவரிடம் பேசினேன். அதாவது, மும்மொழித் திட்டத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் செயல்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவை தெரிவித்து விட்டு, இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்த சட்டத்தினை மேம்படுத்தி, 13+ என்ற அரசியல் சட்ட திருத்தத்தை விரைவில் இலங்கையில் அமல்படுத்த, இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினேன். அதாவது, இலங்கையில் உள்ள எல்லா புராவின்ஸ்களையும், அதாவது, வடகிழக்கு, தெற்கு, மத்திய, மேற்கத்திய புராவின்ஸ்களையும் மற்ற புராவின்ஸ்களையும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, சுயநிர்ணய அதிகாரம் கொண்ட மாநிலங்களாக ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இரண்டாவது, இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னை பற்றி, இலங்கை ஜனாதிபதியிடம் பேசினேன். மீனவர்களை, கடல் எல்லையால் தடை போட்டு தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்கு, மீன் எங்கிருக்கிறதோ அங்கு சென்று, அவர்களால் முடிந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீன் பிடிப்பது தான் அவர்கள் வழக்கம். இலங்கை மற்றும் இந்தியாவின் கடல் எல்லை மிகவும் சிறிய பகுதியாகும். எனவே, சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன் பிடித்தார்கள்; அதனால் பிரச்னை என்ற நிலைக்கு பிரச்னையை வளர்க்காமல், அவர்களுக்கு, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், இலங்கையும் இந்தியாவும் ஒரு தீர்வை அடைய வேண்டும் எனக் கூறி, இரண்டு யோசனைகளை முன் வைத்தேன். இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் பிரச்னைகளை கலந்து பேசி, அவர்களுக்குள் ஒரு திட்டத்தை, வாரத்தில் மூன்று நாட்களுக்கு இலங்கை மீனவர்களும், மற்ற மூன்று நாட்களுக்கு இந்திய மீனவர்களும் சர்வதேச கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கவும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். அவர்களது மீன்பிடி உபகரணங்களை யாரும் சேதப்படுத்தாத வகையில், இரண்டு நாட்டு மீனவர்களும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அந்தந்த நாட்டு கடற்படைகளும் இதற்குரிய பாதுகாப்பை இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கூறினேன். இரு நாட்டு மீனவர்களும் பேசி முடிவெடுத்தால், இலங்கை, இந்தியாவுடன் ஒப்பந்தம் போடத் தயார் என்று, இலங்கை ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். எனவே, இதை அடுத்த கட்டத்திற்கு இந்திய மற்றும் இலங்கை அரசுகள் மற்றும் மீனவர்கள் ஒன்று சேர்ந்து, எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
அது மட்டுமல்ல, Deep Sea fishing, அதாவது, ஆழ்கடல் மீன் பிடி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மீன் பிடிக்கும் பயிற்சியை, இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் கற்றுக் கொடுத்து, ஆழ்கடலில் மீன் பிடித்து, அதை பதப்படுத்தி, மதிப்பு கூட்டி, ஏற்றுமதி செய்யும் கப்பல்களை இந்திய - இலங்கை அரசுகள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அதுமட்டுமல்ல, மீனவர் வாழும் பகுதியில், மீனை பதப்படுத்தி, மதிப்பு கூட்டும் மையங்களை இந்தியாவும், இலங்கையும் நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அப்படி
செய்தால், இரண்டு நாட்டு மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என்று எடுத்துரைத்தேன். ஜனவரி 23ம் தேதி, ஒரு நாள் முழுவதும், யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையை புரிந்து கொண்டேன். யாழ்ப்பாணம் அரசு பிரதிநிதிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும், பத்திரிகை ஆசிரியர்களையும், யாழ்ப்பாணம் மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களது பிரச்னைகளை, என்னிடம் எடுத்துரைத்தனர். பிரச்னையின் யதார்த்தத்தை, நான் அவர்களை சந்தித்த பின் உணர்ந்து கொண்டேன்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். அங்கு நுழைந்ததும், ஆயிரக்கணக்கான மாணவர்கள், மிகுந்த உற்சாகத்துடன் என்னை வரவேற்றனர். சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாத அளவில் கூட்டம். அந்த மாணவர்களிடம் உரையாடிக்கொண்டே, அவர்களிடம் அவர்களது உணர்வுகளை பகிர்ந்து கொண்டே சென்றேன். ஒரு மாணவர் "இதுவரை யாழ்ப்பாணத்திற்கு ஏன் வரவில்லை' என்று கேட்டார். அவரிடம் "யாழ்ப்பாணத்தின் நிலைமைகளை பற்றி, நான் அறிவேன். என் ஆசிரியரே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தான், எனவே, நான் வராவிட்டாலும், உங்கள் நிலைமைகளை புரிந்திருக்கிறேன்; இப்பொழுது உங்கள் உணர்வுகளை அறியவே வந்திருக்கிறேன்' என்று, கூறினேன். நான் என்ன சொல்ல வந்திருக்கிறேன் என்ற ஆவல் அவர்களுக்கு. எனவே தான், யாழ் மாணவர்கள் மத்தியில், "புயலை தாண்டினால் தென்றல்' என்ற தலைப்பில், அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில் பேசினேன்.
அதாவது, ஒவ்வொருவரின் வாழ்விலும், பல புயல்களையும், சில தென்றல்களையுமே எதிர் கொள்ள நேர்கிறது. ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்லும் போது, பல புயல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும், ஓரிரு சமயங்களில், அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெற வேண்டுமானால், பல புயல்களைக் கடக்கும் உள்ள உறுதியைப் பெற வேண்டும். நம் எண்ணங்கள் உறுதியானால், அவை உழைப்பாக மாறி, நாம் எண்ணிய லட்சியத்தை அடையலாம் என்று அவர்களுக்கு, என் வாழ்வின் பல சம்பவங்களை எடுத்து கூறி விளக்கினேன். எனவே, அந்த பேச்சை தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் முழுவதுமாக படிக்க வேண்டும். அவர்களுடன் பல கேள்வி, பதில்களுடன் கலந்துரையாடினேன், அவர்களுக்கு, என்னால் முடிந்த வரை, நம்பிக்கையை ஊட்டினேன். அதன் பின்பு, யாழ்ப்பாணத்தில் இருக்கும் இளைஞர்களையும், தொழில் துறையை சேர்ந்தவர்களையும், மீனவர்களையும், பெரியோர்களையும், யாழ் பத்திரிகையாளர்களையும் சந்தித்து உரையாடினேன். போருக்கு பின், அவர்களது நிலைமையை அறிந்தேன். அங்கு, நான் கண்ட காட்சி, மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. எல்லார் முகத்திலும் புன்னகை இருந்தாலும், அவர்களது புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத எதோ ஒரு துன்ப ரேகை இடையோடுவதை கண்டுணர்ந்தேன். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியுமா என்று எண்ணி சிந்தித்தேன். போயிருக்குமோ என்று நினைத்தேன். இலங்கைக்கான, இந்திய தூதரை அழைத்து, அவர்களுக்கு, இந்தியா செய்து வரும் வளர்ச்சிக்கான உதவிகளையும், அதில் ஏற்படும் தாமத்தையும் கலைந்து, விரைந்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய சொன்னேன். அதற்கு அடுத்தாற்போல், 120 ஆண்டுகள் பழமையான யாழ் இந்து கல்லூரிக்கு சென்றேன். மாணவர்கள் முகத்தில் என்ன ஒரு பரவசம். எங்கு பார்த்தாலும் உற்சாகம். அவர்களை கண்டவுடன், அந்த மாணவர்களின் பரவசமடைந்த முகத்தை பார்த்தவுடன், எங்கே நாம் வராமல் போயிருந்தால், இந்த மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை, நம்பிக்கையை கொடுக்க இயலாமல் எனவே, அந்த மாணவர்களுடன், "வாழ்வில் எப்படி பறக்க வேண்டும்' என்று, அதாவது அந்த மாணவர்களுக்கு, கீழ்கண்ட இலட்சியத்தை அவர்கள் மனதில் விதைத்தேன். அனைத்து மாணவர்களும், என்னுடன் உற்சாகத்துடன் கீழே உள்ள கவிதையை, உரக்க திருப்பி சொன்னார்கள்.
என் இலட்சியம்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சி தான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், பறப்பேன்
வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.
யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு, வாழ்க்கையில் தைரியத்தையும், லட்சியத்தையும் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். யாழ்ப்பாணம் சென்றதினால், என்னால் அதை ஓரளவு செய்ய முடிந்தது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு யாழ்ப்பாண மாணவியின் அபார திறமை, எனக்கு அந்த நம்பிக்கையை கொடுத்தது. நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று, இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து, உரையாடிய போது, மாணவி ஒருவர், "பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும்' என, என்னிடம் கேள்வி எழுப்பினார். அவ்வாறு திறமை வாய்ந்த மாணவியை, நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது. அம்மாணவி தொடுத்த வினாவிற்கு, பதிலளித்த நான், அந்த பதிலைத் திரும்பக்
கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர், அதைக் கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை, நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான்.
நான் சொன்னேன்
உனது இதயத்தில் நேர்மை இருந்தால், உனது நடத்தையில் அழகு இருக்கும்.
உன் நடத்தையில் அழகு இருந்தால், வீட்டில் அமைதி இருக்கும்.
வீட்டில் அமைதி இருந்தால், நாட்டில் அமைதி நிலைக்கும்.
நாட்டில் அமைதியிருந்தால், உலகில் சமாதானம் பிறக்கும்
என, ஆங்கிலத்தில் நான் ஒருமுறை கூறியதை, அதை அப்படியே எப்பிழையும் இல்லாமல், மடை திறந்த வெள்ளம் போல் அந்த மாணவி திரும்பக் கூறியதைப் பார்த்தவுடன், எனக்கு யாழ் இளைஞர்களைப் பற்றிய நம்பிக்கை ஒளி மேலும் பிரகாசித்தது. எனவே, என் அருமை தமிழ் நெஞ்சங்களே, திருவள்ளுவரின் திருக்குறள் நமக்கு அருளிய மிக உன்னத அறிவுரையாவது என்னவெனில்,
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
அதாவது, திருவள்ளுவரின் வாக்குப்படி, சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே கூடாது. எனவே, நண்பர்களே, பயனில்லா சொற்களைப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. பேசிப் பேசி, நாட்களை வீணடிப்பதற்கு பதிலாக, தமிழ் உணர்வுள்ள உலக தமிழ் மக்கள், ஒரு கேள்வியை தங்கள் மனதில் கேட்க வேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்கு, என்னால் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியும்? என்ற கேள்விக்கு, ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, விவேகத்துடன் செயல்பட என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்பட்டால், கண்டிப்பாக அதற்கான பதில் உங்கள் பணிக்கு உயிர் கொடுக்கும், இலங்கை தமிழருக்கு நல்வாழ்வு கிடைக்கும்.
இலங்கையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்து விட்டது. 200 வருடம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யம், இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தது; 17ம் நூற்றாண்டிலிருந்து பல லட்சம் சுதந்திரப் போராட்ட வீரர்களை, சுதந்திரப் போரில் நாம் இழந்தோம். அதையே நினைத்துக் கொண்டிருந்து, பேசிக்கொண்டு, இன்னும் ஆங்கிலேயர்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியாது. இந்த உலகம் எத்தனையோ போர்களை சந்தித்து விட்டது. அதற்கு பல காரண காரியங்கள் அலசப்படலாம். ஆனால், எத்தகைய ஓர் விளைவிற்கும், எதிர் விளைவாக போர் நடக்குமேயானால், அது ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. இனிமேல் நடப்பவற்றை பற்றி சிந்தித்து முன்னேறுவது தான் அறிவார்ந்த சமுதாயத்தின் அடையாளம். அகிம்சையை கையில் எடுத்து, இந்தியாவை ஜனநாயகப் பாதையில் மீட்டெடுத்து, மகாத்மா காந்தி சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்தாரே, அதை, நாம் என்றென்றும் நினைவு கொள்ள வேண்டும்.
பல்வேறு சமஸ்தானங்கள், ராஜ்யங்கள், ஜமீன்களை ஒருங்கிணைத்து, 30 மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி, ஒருங்கிணைந்த இந்தியாவாக இருக்கிறதே அதற்குக் காரணம் நமது ஜனநாயகமும், பலம் வாய்ந்த நமது அரசியல் சாசன சட்டமும் தான். அப்படிப்பட்ட ஜனநாயகம், நம் அண்டை நாடுகளில் வளர்ந்தோங்க, நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். எனவே நண்பர்களே, அந்த அடிப்படையில் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும், இலங்கை தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டில், மதிப்புடனும், சுய மரியாதையுடனும் வாழ, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க, என்னுடைய இலங்கை பயணமானது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் அமைதியையும், அவர்களது வளர்ச்சியையும் ஜனநாயக முறையில் அடைய, நாம் என்றென்றும் உறுதுணையாக இருப்போம்.

Subscribe to:
Posts (Atom)