வாருங்கள் தோழர்களே...
சரித்திரம் புகழும் சங்கனாங்குளத்தில் பிறந்து, இன்று இணையத்தில் உரையாடிக்கொண்டிருக்கும் இளம் தலைமுறைக்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்தில் எத்தனை பெரிய நுண்ணோக்கிகள் வைத்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்த நாம், நமது ஊர் நமக்கு அளித்த ஆன்ம பலத்தாலும், நாம் கற்ற கல்வியாலும். அதே நாட்டின் பல இடங்களில் வசித்துக்கொண்டு, நமக்குள்ளாக இணையதளத்தில் தகவல்களை பரிமாறி வருகிறோம். நம் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கொண்டுவந்து குவிப்பதற்காக உருவானதுதான் இந்த வலைப்பூ. இனி நமது ஊரில் நடக்கும், திருவிழாக்கள், நிகழ்வுகள், உடன் உலக மாற்றங்களுக்குட்பட்ட நமது எண்ணங்கள் யாவும் இதில் பதிவிடப்படும். இந்த வலைப்பூவை பற்றிய உங்கள் கருத்துக்களை sanganankulam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். உங்களுடைய பதிவுகள் பரிசீலனைக்கு பிறகு இங்கே பதிவிடப்படும். எங்கே..ஒவ்வொருவராக நமது ஊர்க்காரர்களையும், நமது சொந்தங்களையும் இங்கே அழைத்து வாருங்கள்.
No comments:
Post a Comment