திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை மிஞ்சும் வகையில் 2011ம்ஆண்டு 120 கொலைகள் நடந்துள்ளன.
"அல்வாவிற்கு மட்டுமல்ல... அரிவாளுக்கும் பெயர் பெற்ற ஊர்' என வெளியூர்காரர்கள் நெல்லை மக்களை கிண்டலடிப்பது வழக்கம். பேசி தீர்க்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படாத சிறு பிரச்னைகள் காலப்போக்கில் விஸ்வரூபம் எடுத்து ஒருவரை மற்றவர் தீர்த்துக்கட்டும் அளவிற்கு விபரீதமாவதை நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சகஜமாக காண முடியும்.
கலாச்சாரம், நாகரிகம் மாறினாலும் நெல்லை மக்களின் மனோபாவத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. எந்த விஷயத்திலும் தீவிரமாக ஈடுபடும் நெல்லை மக்கள் தகராறு, பிரச்னை, மோதல் என்றால் அதில் இறங்கி "ஒருகை' பார்க்க துணிந்து விடுகின்றனர். இதனால் பிரச்னைகள் முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது... சங்கிலித்தொடர் போல கொலைகளின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொலை நிலவரம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2007ம்ஆண்டு 80 கொலைகள், 2008ல் 89 கொலைகள், 2009ல் 95 கொலைகள், 2010ம்ஆண்டு 83 கொலைகள் நடந்தன. 2011ம்ஆண்டு 97 கொலைகள் நடந்துள்ளன. இதில் 4 கொலைகள் நகை, பணத்துக்காக நடந்துள்ளன. பெரும்பாலான கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்பது ஆறுதல் தரும் தகவல்.
இதுதவிர மாவட்டத்தில் மிஷின், சிலிண்டர் வெடித்து இறப்பது, விலங்குகள், பாம்புகளிடம் கடிபட்டு இறப்பது என இயற்கை அல்லாத சம்பவங்களில் 274 ஆண்கள், 165 பெண்கள் இறந்துள்ளனர். வரதட்சணை பிரச்னையில் 8 பெண்கள் இறந்தனர்.
நெல்லை மாநகரில்
23 கொலைகள்
நெல்லை மாநகரப்பகுதியில் 2009, 2010ம்ஆண்டுகளில் தலா 12 கொலைகள் நடந்தன. இந்த எண்ணிக்கைக்கு ஏறக்குறைய 100 சதவீதம் அளவுக்கு 2011ம்ஆண்டு 23 கொலைகள் நடந்துள்ளன. நகைகள், பணத்துக்காக நடந்த கொலைகள் 3. கொலை வழக்குகளில் பெரும்பாலானவற்றில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர் என்கிறது போலீஸ் தரப்பு. ஒட்டுமொத்த நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 2009ல் 107, 2010ல் 95, 2011ல் 120 என கொலைப்பட்டியலின் நீளம் மீண்டும் அதிகரித்திருப்பது சமூக ஆர்வலர்களுக்கு வேதனை ஏற்படுத்தியுள்ளது.
பதறவைக்கும்
கொள்ளைகள்
கொலைகள் ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் கொள்ளை சம்பவங்களும் நெல்லை மாவட்டத்தை விட்டு வைக்கவில்லை. 2011ம்ஆண்டு மாவட்டத்தில் 76 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 40 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கூட்டுக்கொள்ளை வழக்கு ஒன்று மட்டும் பதிவாகியுள்ளது. வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் 203 நடந்துள்ளன. 104 வழக்குகளில் துப்பு துலங்கியுள்ளன. சாதாரண திருட்டு வழக்குகள் 345 பதிவாகியுள்ளன. 276 வழக்குகளில் துப்பு துலங்கியுள்ளன. நகை, பணத்துக்காக நடந்த 4 கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். பதிவான வழக்குகளில் 68 சதவீத அளவு துப்பு துலங்கியுள்ளது. 51 சதவீத அளவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெல்லையில்
60 சதவீதம்
நெல்லை மாநகரப்பகுதியில் 36 வழிப்பறி வழக்குகள், 36 வீடு புகுந்து திருட்டு வழக்குகள், 92 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த வழக்குகளில் 60 சதவீத அளவு துப்பு துலங்கியுள்ளது. கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 22 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""நெல்லை மாவட்டத்தில் சொந்த பிரச்னைகளுக்காக "பழிக்குப்பழி' கொலைகள் அதிக அளவில் நடக்கிறது. ஜாதி, மத மோதல் கொலைகள் நடக்காதது சற்று நிம்மதியளிக்கிறது. கொலைகளை தடுக்க மக்கள் சிந்தனையில் மாற்றம் வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
கொலைகளை அரங்கேற்ற திட்டமிடுபவர்களை முன்கூட்டியே கண்டுபிடித்து கைது செய்தால் கொலைகளை தடுக்க ஓரளவு வாய்ப்புள்ளது. கூலிப்படை நபர்களும் ஒடுக்கப்பட வேண்டும். கொள்ளை, திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த "மாஜி' குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். போலீஸ் ரோந்துப்பணி தீவிரமானால் திருட்டு சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது'' என்றார்

No comments:
Post a Comment